நித்தியானந்தா தலைமறைவாக இருந்துக் கொண்டு நீதித் துறைக்கு சவால் விடுகிறார் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தாவின் பெண் சீடர் சுரேகா, நில மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தார். அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறைக்கு சவால் விடுகிறார். பல வழக்குகளில் பிடிவாரண்ட் இருந்தாலும் நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை. நீதிமன்றத்திற்கு வராத அவருடைய சொத்துகளை நீதித் துறை பாதுகாக்க வேண்டுமா என நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பினார்.