முத்திரைத்தாள் கட்டண உயர்வை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது. ஏற்கெனவே இந்திய முத்திரைத்தாள் சட்டம் 2023 தமிழக பதிவுத்துறையால் சட்டபேரவையில் திருத்தப்பட்டு கடந்த மே 3, 2024 முதல் அமலுக்கு வந்தது. இதன்படி 24 வகைகளுக்கான கட்டணங்கள் 10 சதவீதம் முதல் 33 சதவீதம் வரை முத்திரைத்தாள் கட்டணமும் சொத்தின் சந்தை மதிப்பும் உயர்த்தியதை, உயர் நீதிமன்றம் ரத்து செய்த பிறகும் தமிழக அரசு திரும்பப் பெறாமல் இருப்பது ஏனென்று தெரியவில்லை. இந்த கட்டண உயர்வை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.