ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை வைக்கும் முறையை கனடா உருவாக்கியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய – ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்களின் 15 ஆவது கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:-
நான் கனடா குறித்து மூன்று விஷயங்கள் சொல்லவேண்டும். முதலில், கனடா ஆதரமில்லாமல் குற்றச்சாட்டுகளை வைக்கும் முறையை உருவாக்கியுள்ளது. இரண்டாவது, வெளிநாட்டில் வசிக்கும் நமது இந்தியர்களை அவர்களின் கண்காணிப்பில் வைத்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது. மூன்றாவது, கனடாவில் நடக்கும் சம்பவங்கள் பயங்கரவாத சக்திகளுக்கு அங்குள்ள அரசியல் வெளியைக் காட்டுகிறது” என்று கூறினார்.
மேலும், இந்த நிகழ்வில் பேசிய ஆஸ்திரேலிய பிரதிநிதி பென்னி வாங், “அனைத்து ஆஸ்திரேலியர்களும், அவர்களின் நம்பிக்கை, கலாச்சாரம், வாழ்விடம், அவர்கள் யார் என்பதையும் மீறி அவர்களின் வாழ்விற்கு பாதுகாப்பும், மதிப்பும் எப்போதும் அளிக்கப்படுகிறது. அதேபோல, மற்றவர்களுக்கான சுதந்திரத்தையும் மதிக்க வேண்டும். ஹிந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் மிகவும் வருத்தமளிக்கிறது.
நாங்கள் பல்வேறு கலாச்சாரங்களை மதிக்கும் ஜனநாயகமாக உள்ளோம். அதேபோல, அதை பெருமைப்படுத்தும் கொள்கைகளையும் மதிக்கிறோம். இந்த விவகாரத்தில் எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் தெரிவித்துள்ளோம். கனடாவின் நீதித்துறை செயல்பாட்டின் மீது எங்களுக்கு மதிப்பு உள்ளது. எங்களது கருத்துகளை இந்தியாவிடம் தெரிவித்துள்ளோம்” என்று அவர் கூறினார்.