மகாராஷ்டிரா தேர்தலில் மகத்தான வெற்றியை கொடுத்த மக்கள்: அண்ணாமலை!

நமது பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் நல்லாட்சியை வழங்கிய, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டும் விதமாக தீர்க்கமான முடிவை அளித்துள்ளனர் மக்கள் என கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.

மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் நேற்று முன் தினம் மொத்தம் உள்ள 288 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், ஏத்நாத் ஷிண்டே சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவர் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 95 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவர் பிரிவு 86 இடங்களிலும் வேட்பாளர்களை களம் இறக்கின. கடந்த 20ஆம் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் 288 தொகுதிகளில் 144 தொகுதிகளில் பெரும்பான்மை பெரும் கட்சி ஆட்சியமைக்கலாம்.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி பாஜக கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக பாஜக மட்டும் 132 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 57 தொகுதிகளிலும், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி 50 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக உத்தவ் தாக்கரே சிவசேனா 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 பகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் பத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மற்றவை நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி ஆகி உள்ளது. ஜார்க்கண்டில் பாஜக தோல்வியை சந்தித்தாலும் 21 தொகுதிகளில் அந்த கட்சியை தனித்து வெற்றி பெற்றிருக்கிறது. இதேபோல உத்தர பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களிலும் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. ”

இந்நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டும் விதமாக தீர்க்கமான முடிவை அளித்துள்ளனர் மக்கள் என கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணியை அமோக வெற்றிக்கு இட்டுச் சென்றதற்காக பாட்னாவிஸ் உள்ளிட்டோருக்கு தழிழக பாஜக சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள். நமது பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் நல்லாட்சியை வழங்கிய, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டும் விதமாக தீர்க்கமான முடிவை அளித்துள்ளனர் மக்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

மாநிலத்தின் வளர்ச்சி, விளிம்புநிலை மக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாடு உள்ளிட்டவற்றை அடைய மஹாயுதியின் சிறந்த வெற்றி அமைந்துள்ளது. ஜனநாயகத்தின் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு, ஊழல், அதிகார வெறி, பிரித்தாளும், சந்தர்ப்பவாத ஐ.என்.டி.ஐ கூட்டணியை முற்றிலுமாக மகாராஷ்டிரா மக்கள் நிராகரித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.