சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிப்பு!

புயல், மழை காரணமாக சென்னையில் 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை அதிகாலை 4 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு வர வேண்டிய 19 விமானங்கள் மோசமான வானிலையால் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. விமான நிலைய ஓடுபாதையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாளை(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடலில் ஃபென்ஜால் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.