சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு: செந்தில் பாலாஜி!

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டு உள்ளார்.

ஃபெஞ்சல் புயலால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ஆறுபோல் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் சென்னையே ஸ்தம்பித்து உள்ளது. ஏற்கனவே சூறை காற்று வீசியதால் மரங்கள் முறிந்து வேருடன் சாய்ந்தும் விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன. அவற்றை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகுின்றனா்.

இந்த நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கி மின்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் டிசம்பர் 10 ஆம் தேதி வரை மின் கட்டணத்தை அபராத தொகை இன்றி செலுத்தலாம் என அறிவித்துள்ளார்.