சங்கி என்றால் நண்பன்.. திராவிடன் என்றால் திருடன் என்று சீமான் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழு பேர் உயிரிழந்தது மிக துயரமான சம்பவம். பருவமழை என்பது இனிமேல் இருக்காது; மழை, கனமழை, புயல் மழை என்றுதான் இருக்கும். இதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
‘என்னைத் தனிப்பட்ட முறையில் சங்கி எனக் கூறியதற்கு செருப்பைக் கழட்டி அடிப்பேன்’ எனக் கூறினேன். சங்கி என்றால் நண்பன் எனப் புராண காலங்களிலேயே விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கி என்றால் நண்பன் என்று பொருள்படுகிறது. திராவிடன் என்றால் திருடன் என்று பொருள்படுகிறது. நீங்கள் தமிழ் மக்களை, தமிழ் இனத்தை மறைத்து திராவிடன் திராவிடன் எனக் கூறி வருகிறீர்கள்.
எனது தந்தையை சங்கி எனக் கூறுவது வருத்தமளிக்கிறது என ரஜினியின் மகள் வருத்தம் தெரிவித்தார். நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவாகப் பேசினேன். நாணயம் வெளியிடுவதற்கு மத்திய மந்திரிகளை அழைத்து வருகிறீர்கள், சென்னையில் இருந்து டெல்லி சென்று மத்திய அரசின் தலைவர்களைப் பார்த்து சந்தித்துப் பேசுகிறீர்கள், அப்படி என்றால் திமுகவைச் சார்ந்தவர்கள் எல்லாம் சங்கி இல்லையா?. இவ்வாறு அவர் கூறினார்.