விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாளில் விஜய்க்கு அழைப்பு!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று விஜய்க்கு அழைப்பு விடுத்தனர்.

விஜயகாந்த் முதலாம் ஆணடு நினைவு நாள் டிச.28-இல் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அமைதிப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த நிலையில், விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினக் கூட்டத்தில் பங்கேற்க நடிகரும் தவெக தலைவருமான விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், மதிமுக பொதுச் செயலா் வைகோ, பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.