அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், முதலில் 2 பேர் என்று சொன்னார்கள்.. இப்போது ஒருத்தர் தான் என்று சொல்கிறார்கள். குற்றவாளி செல்போனை ஏரோபிளைன் மோடில் போட்டு இருந்தாங்க என்று சொல்றாங்க.. அது எப்படி உங்களுக்கு தெரியும்? அவர் ஏரோபிளைன் மோடில் ஏன் போடவேண்டும்? பிளைட்டில் போகவா வந்தார்.. என்று சரமாரி கேள்விகளை சீமான் முன்வைத்தார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முக்கியமான இடங்களில் எப்படி சிசிடிவி கேமரா காட்சிகள் வேலை செய்யாமல் போகிறது என்றும், பிளைட் மோடில் போட்டதாக ஞானசேகரன் சொன்னதை போலீசார் எப்படி நம்பினார்கள் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். மேலும் அண்ணாமலை சாட்டையால் அடித்தது குறித்தும் பேசினார். சீமான் பேசியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், முதலில் 2 பேர் என்று சொன்னார்கள்.. இப்போது ஒருத்தர் தான் என்று சொல்கிறார்கள். இப்போது ஏரோபிளைன் மோடில் போட்டு இருந்தாங்க என்று சொல்றாங்க.. அது எப்படி உங்களுக்கு தெரியும். அவர் ஏரோபிளைன் மோடில் ஏன் போடவேண்டும். பிளைட்டில் போகவா வந்தார்.. பலாத்காரம் பண்ண தான் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்திருக்காரு. அதை எப்படி நீங்க கண்டுபிடிச்சீங்க.. அவரு சொன்னாரு என்று சொல்கிறீர்கள். அப்போ அவர் சொல்ற எல்லாத்தையும் நம்புவீர்களா..
ஒருத்தரே அந்த இடத்தில் வைத்து ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்திருக்க முடியுமா?. உங்களால் நம்ப முடிகிறதா? அங்கே கண்காணிப்பு கேமரா ஏன் வேலை செய்யாமல் போனது?.. ராம்குமார் சிறைக்குள் தூக்கில் தொங்கியபோது சிசிடிவி வேலை செய்யவில்லை. தொடர்வண்டி நிலையத்தில் பெண் வெட்டி கொல்லப்படும்போதும் சிசிடிவி வேலை செய்யவில்லை. கோடநாடிலும் அப்படித்தான். உங்களுக்கு தேவையான இடங்களில் மட்டும் எப்படி சிசிடிவி வேலை செய்யாமல் போய்விடுகிறது. உங்களுக்கு தேவையான இடங்களில் மட்டுமது வேலை செய்யாமல் நின்று விடுகிறதே அது எப்படி? அதுவும் அரசு ஊழியரா? அது என்ன கணக்கு என்றே தெரியவில்லையே?…
எவ்வளவோ எஃப் ஐ ஆர் பைல்கள் போடப்படும் போது, குறிப்பிட்ட அந்த மாணவி அளித்தது மட்டும் எப்படி வெளியாகும்?.. அந்த பெண்ணின் குடும்பத்தை பற்றி எல்லாம் ஏன் வெளியில் வருகிறது. ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்ததைவிட, இது பெரிய கொடூரமானது. அந்த பெண்ணை வெளியில் தலைகாட்ட முடியாமல் செய்துவிட்டீர்கள். காவல்துறை சரியாக செயல்பட்டது என்றால் ஏன் நீதிமன்றம் ஏன் கண்டிக்கப்போகிறது. மாவுக்கட்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
குற்றவாளியை பிடித்துவிட்டோம் என்று சொல்கிறார்கள். பிடித்து அவரை சும்மா பெயருக்கு கை, கால்களில் கட்டு போட்டு வைத்து இருக்கிறார்கள். குற்றவாளியை பிடித்து கை, கால்களில் மாவுக்கட்டு போட்டுவிட்டால் காவல்துறையின் கடமை முடிந்துவிடுமா..
அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது. எனக்கும் கோபம் இருக்கிறது. ஆனால் அதற்காக தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்ளக்கூடாது. குற்றவாளியை தான் சாட்டையால் அடிக்க வேண்டும். நம்மை ஏன் அடிக்க வேண்டும். தனது கோபத்தை சட்டையால் அடித்து வெளிப்படுத்திய அண்ணாமலையை விமர்சிக்க கூடாது. செருப்பு அணிய மாட்டேன் என்பதையெல்லாம் ஏற்க முடியாது.
60 வருடமாக எனது பிள்ளைகளை காலை உணவுக்கு கூட வழியில்லாதவர்கள் மாதிரி தான் வச்சிருக்கீங்களா.. இது என்ன சோமாலியாவா?, கென்யா, நைஜீரியா மாதிரியா இருக்கு. எல்லா வளமும் இங்க இருக்கு. காலைல என்ன சாப்பாடு என்று பார்த்தால், பால், முட்டை அப்படின்னு சொன்னீங்க. ஆனால் அங்க கொடுக்கிறது வாரத்தில் 5 நாளும் உப்புமா தான். நீங்க உப்புமா கம்பெனி நடத்துறீங்க. இவ்வாறு அவர் கூறினார்.