அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் யார் அந்த சார்? என்ற பதாகைகளுடன் சென்னை எக்ஸபிரஸ் அவென்யூ மாலில் அதிமுகவின் போராட்டம் நடத்தினா். இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து திமுகவுக்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பலவகை நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக சார்பில் நூதன போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அதிமுகவினர் ஏராளமானவா்கள் திடீரென குவிந்தனா். அவர்கள் மாலின் உள்ளே நுழைந்து, கைகளில் பதாகைகளுடன் போராட்டம் நடத்தினா். அவர்களது கைகளில் வைத்த பதாகைகளில் யார் அந்த சார்? என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, யார் அந்த சார்? என்ற பதாகையுடன் போராட்டத்தில் குதித்த அதிமுகவை பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு சாமானியனைப் பாதிக்கும் பிரச்சினைகளில் அரசியலில் ஒரு போதும் இருக்க முடியாது. இந்தப் பிரச்சினையை எடுத்துக்கொண்டு ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டதற்கு பாராட்டுங்கள் அதிமுக” என கூறி இருந்தார்.
ஏற்கனவே அண்ணாமலை, தனது கோவையில் உள்ள வீட்டின் முன்பு மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தன்னை தானே சவுக்கால் அடித்து நூதன தண்டனை கொடுத்து இருந்தார். மேலும் திமுக ஆட்சியை விட்டு இறங்கும் வரை காலணி அணியபோவது இல்லை என கூறிய அண்ணாமலை, செய்தியாளர் சந்திப்பின்போதே அவற்றை கழற்றி எரிந்தார். அண்ணாமலையின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் விமர்சனங்களை முன்வைத்து வைத்து வருகின்றனா்.
இதற்கிடையே மாணவி பாலியல் வழக்கில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட நூதன போராட்டத்திற்கு அண்ணாமலை பாராட்டு தெரிவித்து உள்ள அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளது. எதிர் எதிர் துருவங்களாக இருந்த அதிமுக மற்றும் பாஜக இடையே தற்போது நட்புறவு ஏற்பட்டது போல் இந்த சம்பவம் எடுத்துரைக்கப்படுகிறது. ஒருவேளை இது 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி வியூகத்தின் தொடக்கமாக இருக்குமா? என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.