மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி பிறந்தநாளையொட்டி, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மமதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மேற்கு வங்க முதல்வர் செல்வி. மமதா பானர்ஜிக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுவாழ்வின்மீது தாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பினால் தொடர்ந்து பல நல்மாற்றங்கள் விளையட்டும்! தாங்கள் நீண்டகாலம் மகிழ்ச்சியோடும் வலிமையோடும் வெற்றியோடும் திகழ விழைகிறேன் என கூறியுள்ளார்.