ஒரு நடிகைக்கு போதைப்பொருட்கள் கொடுத்து, அவர் சுயநினைவு இல்லாத நேரத்தில் பாலியல் ரீதியாக கொடுமைபடுத்தியுள்ளார் சீமான் என்று வீரலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, சமூக நீதிக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? பெண்ணுரிமைக்காக அவர் என்ன செய்தார்? தாய்மொழி தமிழை சனியன், காட்டுமிராண்டி மொழி என சொன்னவர் பெரியார். திருக்குறளை மலம் என்று சொன்னவர் பெரியார். உடல் இச்சைக்கு தாய், மகள், உடன் பிறந்தவளோடு உறவு வைத்து கொள்ள சொன்னவர் பெரியார். பல நாடுகளில் மது புழக்கம் இருக்கும் போது இங்கு தடை செய்வது மனையுடன் படுக்கக்கூடாது என்று சொல்வது போல இருக்கிறது என சொன்னவர் பெரியார்” என்றெல்லாம் காட்டமான விமர்சனங்களை பெரியார் மீது சீமான் முன்வைத்தார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.. ஆனாலும், இன்று மீண்டும் செய்தியாளர்களிடம் பேசியபோது, வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? பெரியார் பேசினார் என்றால் பரவாயில்லை. பெரியார்தான் எல்லாம் செய்தார் என்று சொன்னால் அது எப்படி? அம்பேத்கர், பெரியாரை ஒன்றாக வைப்பது, ஒப்பிடுவது எப்படி சரியாகும்? என்று மறுபடியும் விமர்சித்தார். இதனால் கொந்தளித்துபோன திராவிடர் விடுதலை கழகம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளது. அதேபோல, திமுக தரப்பிலும், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வீரலட்சுமி கூறியதாவது:-
ஒரு நடிகை என்னிடம் சொன்ன அந்தரங்க தகவல்களை எல்லாம் நான் வெளியே சொன்னால் சீமான் எவ்வளவு பெரிய காம கொடூரன்? என்று சொல்வார்கள்.. அதுவும் சீமானுக்கு பின்னால் நிற்கும் பெண்களே அவரை காரி துப்புவார்கள். கணவன்-மனைவியாக இருந்தாலும், அந்த மனைவிக்கு சம்பந்தம் இருந்தால்தான் ஈடுபட முடியும்.. அதுவும் மனைவி சுயநினைவுடன் இருக்க வேண்டும். ஆனால் அந்த நடிகைக்கு போதைப்பொருட்கள் கொடுத்து, அவர் சுயநினைவு இல்லாத நேரத்தில் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளார் சீமான்.. தாம்பத்திய உறவு சம்பந்தமாக என்கிட்ட எல்லாமே அந்த நடிகை சொல்லியிருக்காங்க.. அந்த விபரங்களை நான் வெளியிட்டால் பெண்களே அவரை அடித்து துரத்துவார்கள்.
பெண்கள் உரிமைக்காக போராட சீமானுக்கு எந்த உரிமையும் இல்லை. சீமானே ஒரு பாலியல் குற்றவாளி.. அப்படியிருக்கும்போது அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் போராடுவதற்கு 10 பெண்களை கூட்டிட்டு வர்றாரு சீமான்? இவர் கட்சியில் இருப்பவர்களும் பாலியல் குற்றவாளிகள்தான், அப்புறம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு என்ன நீதியை இவர் பெற்றுத் தந்துவிட போகிறார்? இனிமேமல், சீமான் வாய் திறக்காமல் அமைதியாக இருந்தாலே, இந்த விஷயத்தை நாங்கள் கிளற மாட்டோம்.. வதந்திகளை, ஆதாரமற்ற தகவல்களை, பரப்புவதையும் சீமான் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இதனிடையே, வீரலட்சுமி முன்வைத்திருக்கும் இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சீமான், “நல்ல மனநிலைமையில் இருப்பவரிடம், என்னை பற்றி பேச சொல்லுங்கள்.. அப்போது நான் பதில் சொல்கிறேன்” என்று கூறினார்.