விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியதோடு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக நேற்று வழங்கியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (ஜனவரி 10) அங்கீகாரம் வழங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று இரவு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (நேற்று) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று (நேற்று) இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.