முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இது பற்றி தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:-
அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ன் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரின் திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். எம்ஜிஆரின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடியும் புகழாரம் சூட்டி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.