நாட்டின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிகார் மாநிலம் பாட்னாவில் இன்று நடைபெற்ற ‘அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் (சம்விதன் சுரக்ஷா சம்மேளனம்) கலந்துகொண்டு பேசினார். மத்திய பாஜக அரசைவும் ஆர்எஸ்எஸ்ஸையும் அவர் விமரிசித்துப் பேசினார். அவர் கூறியதாவது:-
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலித்துகள் பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள் என்பதை அவர்கள்(பாஜக) அறிந்ததும் அவர்கள் அதிகாரத்தைப் பறித்தார்கள். மத்திய பாஜக ஆட்சியில் அம்பானி, அதானி, ஆர்.எஸ்.எஸ்-க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொரு அமைப்பிலும் தங்கள் ஆள்களை வைத்திருக்க நினைக்கிறார்கள்.
நாட்டின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். பிகாரில் நடத்தப்பட்ட போலி சாதிவாரி கணக்கெடுப்புப்போல இது இருக்கக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒரு கொள்கை வகுக்கப்பட வேண்டும். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம். 50% இடஒதுக்கீடு என்ற தடையை நாங்கள் தகர்ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.