ஈரோடு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிடும் நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி காலமானார். இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிடுகிறது. அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. 55 பேர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதி பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் அனுமதி பெறாமல் ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டதாக, 8 பேர் மீதும் BNS-171 பிரிவின் கீழ் ஈரோடு நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.