சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

கொல்​கத்​தா​வில் பெண் மருத்​துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்​கில், சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்​டும் என்று கோரி உயர் நீதி​மன்​றத்​தில் மேற்​கு​வங்க அரசு மேல்​முறை​யீடு செய்​துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் உள்ள ஆர்ஜி கர் மருத்​துவ​மனை​யில் பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்​லப்​பட்​டார். இதுதொடர்பாக தன்னார்​வலரான சஞ்சய் ராய் கைது செய்​யப்​பட்​டார். ஆனால், இந்த கொடுமைக்கு பின்னணி​யில் பலர் இருப்​பதாக மருத்​துவர்​களும், அந்தப் பெண்​ணின் பெற்​றோரும் கூறிவந்​தனர். அத்துடன் மாநிலம் தழுவிய அளவில் மருத்​துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்​தினர். அவர்களுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பல முறை பேச்சு​வார்த்தை நடத்த முயன்​றும் முடிய​வில்லை. பின்னர் இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்​றப்​பட்​டது. எனினும், மேற்கு வங்க அரசு, போலீ​ஸார் மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்​வதாக பாதிக்​கப்​பட்ட பெண் மருத்​துவரின் பெற்​றோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலை​யில், குற்றம் சாட்​டப்​பட்ட சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கொல்​கத்தா செஷன்ஸ் நீதி​மன்றம் நேற்று​முன்​தினம் தீர்ப்​பளித்​தது. வழக்கு விசா​ரணை​யின் போது சிபிஐ தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர், “குற்றம் சாட்​டப்​பட்​ட​வருக்கு மரண தண்டனை விதிக்க வேண்​டும். இந்த வழக்கை அரிதினும் அரிதான வழக்காக கருத வேண்​டும்” என்று வாதிட்​டார். ஆனால், நீதி​மன்றம் அதை ஏற்க​வில்லை. பாதிக்​கப்​பட்ட பெண்​ணின் குடும்பத்​துக்கு ரூ.17 லட்சம் மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்​டும் என்று நீதி​மன்றம் உத்தர​விட்​டது.

இந்நிலை​யில் சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க கோரி, மேற்கு வங்க அரசு உயர் நீதி​மன்​றத்​தில் நேற்று மேல்​முறை​யீடு செய்​தது. உயர் நீதி​மன்ற அமர்வை அணுகி இதுதொடர்பான மனுவை விசாரணைக்கு ஏற்க அட்வகேட் ஜெனரல் கிஷோர் தத்தா வேண்​டு​கோள் விடுத்​தார். அதை ஏற்றுக் கொண்ட நீதி​மன்​றம், மேற்கு வங்க அரசின் மேல்​முறை​யீட்டு மனுவை விசா​ரணைக்கு பட்டியலிட உத்தர​விட்​டது. இந்த தீர்ப்பை கேட்டு பா​திக்​கப்​பட்ட பெண்​ணின் ​தாய் அ​திர்ச்சி அடைந்​துள்ளார். என் மகள் ​கொல்​லப்​பட்​டதற்கு பின்​னால் மிகப்​பெரிய சதி இருக்​கிறது” என்​றார்​.