கெஜ்ரிவால் ஆட்சிக்கு வருவதற்கு முன், 3 ஆண்டுகளில் யமுனையை தூய்மை செய்து விடுவேன் என கூறினார் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, விஷ்வாஸ் நகர் சட்டசபை தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட்டால், 3 ஆண்டுகளில் யமுனையை தூய்மை செய்து விடுவேன். குடிக்க கூடிய நீராக மாற்றுவேன் என கெஜ்ரிவால் கூறினார். ஆனால் அதன்படி செய்ய முடியாதபோது, அரியானா மக்கள் விஷம் கலந்து விட்டனர் என கூறுகிறார்.
டெல்லி மக்களை விஷம் குடிக்க செய்ய கூடிய முதல்-மந்திரியையா பா.ஜ.க. கொண்டுள்ளது? என நான் உங்களை கேட்க விரும்புகிறேன். அரியானா முதல்-மந்திரி நயப் சிங் சைனி, அவராகவே யமுனை ஆற்றுக்கு சென்று அந்த தண்ணீரை குடித்திருக்கிறார் என கூறியுள்ளார்.
டெல்லியின் ராஜ்காட் பகுதியருகே யமுனை ஆற்று நீரை குடிக்க வரும்படி கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்த சைனி, அதனை குடித்து காண்பித்ததுடன், அரசியல் நலன்களுக்காக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கெஜ்ரிவால் கூறுகிறார் என்றும் கூறினார். அரியானாவில் இருந்து தண்ணீர் விநியோகத்தில் பற்றாக்குறை என்பது இல்லை. ஆனால், டெல்லி அரசு இதனை விநியோகிப்பதிலேயே பற்றாக்குறை உள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.