நீங்க தோப்பிங்கனு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். ஆனா இவ்வளவு பிரமாண்டமா தோப்பீங்க அப்படின்னு நான் எதிர்பார்க்கல. நான்தான் அப்பவே சொன்னேன் என்னோட சாபம் உங்கள ஜெயிக்க விடாதுன்னு என மீண்டும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து இருக்கும் நிலையில் திமுக வேட்பாளரான சந்திரகுமார் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருக்கிறார். 17 சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 493 வாக்குகள் பெற்ற அவர் 90659 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். திமுகவை எதிர்த்து தமிழகத்தின் ஒரே பிரதான கட்சியான நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட நிலையில் அதன் வேட்பாளரான சீதாலட்சுமி டெபாசிட்டை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை விஜயலட்சுமி இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:-
வாழ்த்துக்கள் சீமான் அவர்களே, நீங்க தோப்பிங்கனு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். ஆனா இவ்வளவு பிரமாண்டமா தோப்பீங்க அப்படின்னு நான் எதிர்பார்க்கல. நான்தான் அப்பவே சொன்னேன் என்னோட சாபம் உங்கள ஜெயிக்க விடாதுன்னு. இப்போ உங்களுக்கு குளுகுளுனு இருக்கா.. என்ன தமிழ்நாட்டு மக்கள் கூட வாழ விடாமல் என்னை கர்நாடகாவுக்கு ஓட்டுனீங்களே. அன்னைக்கு எனக்கு இப்படித்தான் இருந்தது. ஈரோடு மக்களுக்கு என்னோட நன்றிய தெரிவிச்சுக்கிறேன். மக்கள்தான் சீமானுக்கு சரியான அடிய கொடுக்க முடியும் அப்படின்னு நான் சொல்லி இருந்தேன். அதை இன்னைக்கு அவங்க நடத்திக் காட்டி இருக்காங்க.. பெரியாரே எனக்கு மண்ணு தான் அப்படின்னு சொன்ன வாய அட்ரஸ் இல்லாம மண்ணுக்குள்ள புதைச்சுட்டாங்க.. இன்னைக்கு திமுகவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..
திமுக காலகட்டத்தில் தான் சீமான் நல்ல அடி வாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் வாங்கணும்.. ஏன்னா தோத்தால்தான் சீமான் மனுஷன் ஆவார். இல்லனா தலையை விரிச்சு போட்டு ஆடிட்டு இருப்பார். சீமான் அவர்களே கர்மா எப்படி நடக்குதுன்னு பாத்தீங்களா? நான் இங்க துடிச்சு கதறிக்கிட்டு இருக்கும்போது அவ கத்திகிட்டே கிடக்கட்டும் அப்படின்னு உங்க வேலைய பாத்துட்டு பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருந்தீங்க.. மக்கள் என்ன பண்ணாங்க பாத்தீங்களா.. அவனும் கத்திகிட்டே கிடக்கட்டும் அப்படின்னு சொல்லிட்டு உங்கள கண்டுக்காம திமுகவுக்கு ஓட்டு போட்டு உங்களுக்கு நாமம் போட்டுட்டு போயிட்டாங்க. இன்னும் நிறைய தோல்விகளை நீங்க சந்திப்பீங்க சீமான்.. உங்களுக்கு தான் விஜயலட்சுமி பிடிக்காது. உங்களுக்கு வெற்றியும் கிடைக்காது.. லட்சுமியும் கிடைக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.