ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியிருக்கிறார். இன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்குச் சென்ற பவன் கல்யாணுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிநாத சுவாமி தரிசனம் செய்த பவன் கல்யாண், கோவில் மண்டபத்தில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தார்.
கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் சனாதன தர்ம யாத்திரை தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார்.அதன்படி கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியிருக்கிறார். பல்வேறு கோயில்களில் வழிபாடு நடத்தி வருகிறார். பிப்ரவரி 12 ஆம் தேதியான நேற்று கேரளாவில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலுக்குச் சென்று தனது சனாதன தர்ம பயணத்தை தொடங்கினார் பவன் கல்யாண். இதேபோல் கேரளமாநிலம் கொச்சி அருகே உள்ள அகஸ்திய மகரிஷி கோயிலில் சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.
இதனிடையே ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்குச் சென்றார். அங்கு பவன் கல்யாணுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிநாத சுவாமி தரிசனம் செய்த பவன் கல்யாண், கோவில் மண்டபத்தில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு சென்று தற்போது சுவாமி தரிசனம் செய்தார். ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு வந்த பவன் கல்யாணுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பவன் கல்யாண் வந்துள்ளதை கேள்விப்பட்டு, கும்பகோணம் தனியார் கல்லூரியில் பயிலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பவன் கல்யாணை காண கோவிலில் குவிந்தனர்.
இதனிடையே தமிழ்நாடு வந்துள்ள பவன் கல்யாண் சனாதன தர்ம யாத்திரையின் ஒரு பகுதியாக முருகனின் அறுபடை வீடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.