எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறு உருவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: ஆர்.பி.உதயகுமார்!

“மக்கள் சக்தி பெற்ற அதிமுகவுக்கு, எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்திவிட முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு வடிவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

எதிரிகள், துரோகிகள் எடுத்துவைக்கும் வாதங்கள் அனைத்தும் அதிமுகவை அசைத்துக்கூட பார்க்கமுடியாது. அது அதிமுகவுக்கு எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் அதிமுக மக்கள் இயக்கம். மக்களுக்காக பாடுபடும், உழைக்கும் இயக்கம். மக்காளால் நான் மக்களுக்காவே நான். உங்களால் நான் உங்களுக்காக நான். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இனி இல்லை என்ற நிலை வர வேண்டும் என்பதை தாரக மந்திரமாக கொண்டு ஜெயலலிதா செயல்பட்டு வந்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு வடிவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். மாபெரும் தியாக வேள்வியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

மக்கள் சக்திதான் மகத்தான் சக்தி. மக்கள் சக்திதான் ஒரு இயக்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். அதிமுகவுக்கு வரும் சோதனைகளை தொண்டர்கள் மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். களத்துக்கு சென்று, மக்களை, இளைஞர்களை, மாணவர்களை மற்றும் விவசாயிகளை சந்திப்போம். களத்தில் அவர்களை சந்தித்து உண்மையை, சத்தியத்தை எடுத்துச் சொல்வோம். அதிமுகவுக்கு கிடைத்த இறையருள்தான் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில், மலரச் செய்ய உழைத்துக் கொண்டிருப்பவர் தான் எடப்பாடி பழனிசாமி. இது சோதனைக் காலம் என யாரும் சோர்ந்துவிட வேண்டாம். அதிமுகவுக்கு வரும் சோதனைகளை தொண்டர்கள் மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.