இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதை ஏற்க முடியாது: டி.ராஜா!

தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதை ஏற்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே கல்வி கொள்கை அமல்படுத்தும் விஷயத்தில் கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இருதரப்பும் கடுமையான வார்த்தைப்போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதை ஏற்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,” தேசிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் குறிப்பிட்ட ஒரு மொழியை திணிக்க ஒன்றிய அரசு முயலுவதை ஏற்க முடியாது. அரசியல் ஆதாயம் என வந்தால் மட்டும் தமிழ் மற்றும் தமிழ் பண்பாடு என புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் யதார்த்தத்தில் அவர்கள் தமிழுக்கு எதிராக செயல்படுகிறார்கள்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா தெரிவித்து இருக்கிறார்.