அதிமுக உட்கட்சி விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்: அமைச்சர் எஸ்.ரகுபதி!

அ​திமுக உட்கட்சி விவகாரம் மத்திய அரசின் திரு​விளை​யாடல் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரி​வித்​தார்.

புதுக்​கோட்​டை​யில் அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:-

திமுக ஆட்சி மீது பள்ளி, கல்லூரி மாணவி​களுக்கு நம்பிக்கை ஏற்பட்​ட​தால்​தான், காவல் நிலை​யங்​களில் புகார் அளிக்​கின்​றனர். அதனடிப்​படை​யில் விசா​ரித்து, உரிய நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வருகிறது.

அரிமளம் அருகே அரசு உயர்​நிலைப் பள்ளி​யில் எழுந்த பாலியல் பிரச்​சினை​யிலும், மாணவிகள் எழுத்​துப்​பூர்​வமாக புகார் அளித்​ததன் அடிப்​படை​யில்​தான் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. யாரை​யும் பழிவாங்​கும் போக்​குக்கு, அரசு துணை போகாது. குற்றம் நேரிடும் முன்பே தடுப்பது என்பது இயலாத காரி​யம். அதேநேரத்​தில், குற்றம் நடைபெற்ற பிறகு, உரிய நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வருகிறது. அமைச்சர் செந்​தில் பாலாஜி வழக்கு விவகாரத்​தில், தமிழக அரசின் கருத்து நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​படும்.

ஜப்பான், சீனா போன்ற நாடுகள் ஒருமொழியை வைத்​துத்​தான் வளர்ச்சி அடைந்​துள்ளன. தமிழகத்​தில் இருமொழிக் கொள்​கையே போதும், மும்​மொழிக் கொள்கை தேவை​யில்லை. ஆனால், மத்திய அரசு இந்தி​யைத் திணித்​துக் கொண்​டு​தான் இருக்​கிறது. முன்​னாள் முதல்வர் பழனிசாமி, மத்திய அரசுடன் மறைமுக கூட்டணி வைத்​துள்ள​தாலேயே, மத்திய அரசை நேரடியாக விமர்​சிப்​ப​தில்லை. அதிமுகஉட்​கட்சி ​விவ​காரம் என்​பது, மத்​திய அரசு நடத்திய ​திரு​விளை​யாடல்தான். இவ்​வாறு அமைச்சர் ரகுபதி​ கூறினார்.