அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் இந்தியா வருகிறார்!

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற நிலையில், அவருக்கு அடுத்து கவனம் பெற்றவர் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ். இவர் தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்ட உஷா சிலுகுரி என்பவரை கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஜே.டி.வான்ஸ் இம்மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜே.டி.வான்சுடன் அவரது மனைவி உஷா சிலுகுரியும் இந்தியா வர இருப்பதாக அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த உஷா வான்ஸ், அமெரிக்க துணை ஜனாதிபதியாக தனது கணவர் ஜே.டி.வான்ஸ் பொறுப்பேற்ற பிறகு தான் பிறந்து வளர்ந்த நாட்டுக்கு முதல் முறையாக அமெரிக்காவின் ‘2-வது பெண்மணி’ஆக வர இருக்கிறார். இவர்களது இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவர்கள் வருகைக்கான தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஜே.டி.வான்ஸ் சமீபத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு வேன்ஸ் மேற்கொண்ட பயணங்களுக்கு பிறகு, இரண்டாவது அரசு முறை சர்வதேச பயணம் இதுவாகும்.