ராகுல் காந்தி வியட்நாம் மீதான அசாதாரண பாசம் குறித்து விளக்க வேண்டும்: பாஜக!

காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவரது தொகுதியை விட, வியட்நாமில் அதிக நேரம் செலவிட்டுள்ளார். வியட்நாம் மீதான அசாதாரண பாசம் குறித்து விளக்க வேண்டும் என பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-

ராகுல் காந்தியை எங்கே? அவர் வியட்நாம் சென்றுள்ளதாக கேள்விப்படுகிறேன். அவர் தன்னுடைய சொந்த மக்களவை தொகுதியில் நீண்ட நேரம் செலவழிப்பதில்லை. திடீரென வியட்நாம் மீது அதிக பாசம் வைப்பதற்கான காரணம் என்ன?

வியட்நாம் மீதான அசாதாரண பாசம் குறித்து ராகுல் காந்தி விளக்க வேண்டியது அவசியம். அவர் அங்கே அடிக்கடி செல்வது மிகவும் வினோதமானது. ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர். அவர் இந்தியாவில் இருக்க வேண்டும். இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

பாஜக ஐடி துறை தலைவர் அமித் மாள்வியா எக்ஸ் பக்கத்தில், “எதிர்க்கட்சித் தலைவர் என்ற முக்கிய பதவியை ராகுல் காந்தி வகிக்கிறார். மேலும் அவர் மேற்கொண்ட ஏராளமான ரகசிய வெளிநாட்டுப் பயணங்கள், குறிப்பாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது தேசியப் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.