வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் அருண் உத்தரவு!

போக்​கு​வரத்து நெரிசல் காரண​மாக வள்​ளுவர் கோட்​டத்​தில் போராட்​டம் நடத்த காவல் ஆணையர் அருண் தடை விதித்​துள்​ளார்.

சென்​னை​யில் அரசி​யல் கட்​சி​யினர் மற்​றும் பல்​வேறு அமைப்​பு​களைச் சேர்ந்​தவர்​கள் போராட்​டம், ஆர்ப்​பாட்​டம் நடத்த சைதாப்​பேட்டை பனகல் மாளி​கை, மாவட்ட ஆட்​சியர் அலு​வல​கம் அரு​கில், வள்​ளுவர் கோட்​டம் உள்​ளிட்ட சில இடங்​களில் போலீ​ஸார் அனு​மதி அளித்து வரு​கின்​றனர். அதன்​படி, சென்​னை​யின் மையப் பகு​தி​யான நுங்​கம்​பாக்​கத்​தில் அமைந்​துள்ள வள்​ளுவர் கோட்​டத்​தில், அடிக்​கடி போராட்​டம் நடை​பெறும். இதனால் அந்​தப் பகுதி மட்​டும் அல்​லாமல் அதைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களி​லும் அடிக்​கடி போக்​கு​வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து காவல் ஆணை​யர் அருண் விசா​ரணை நடத்​தி​னார். இதில், போராட்​டத்​தின்​போது போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​படு​வ​தால் வாகன ஓட்​டிகள் கடும் இன்​னல்​களுக்கு ஆளானது உறுதி செய்​யப்​பட்​டது. அதோடு மட்​டுமல்​லாமல் பல்​வேறு தரப்​பிலிருந்​தும் இங்கு போராட்​டம் நடத்த அனு​ம​திக்க வேண்​டாம் என்ற கோரிக்கை எழுந்​துள்​ளது.

இதனையடுத்​து, வள்​ளுவர் கோட்​டம் அருகே போராட்​டம் நடத்த காவல் ஆணை​யர் தடை விதித்​துள்​ளார். அதற்கு பதிலாக திரு​வல்​லிக்​கேணி சுவாமி சிவானந்தா சாலை​யில் போராட்​டம் நடத்த அனு​மதி வழங்​கப்​படும் என அறி​வித்​துள்​ளார். போராட்​டம், ஆர்ப்​பாட்​டம் நடத்​துபவர்​கள் உரிய சட்ட வழி​காட்​டு​தலின்​படி போலீ​ஸாரிடம் அதற்கு முன்​னரே அனு​மதி பெறவேண்​டும் எனவும்​ அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.