ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி மீது உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வக்கீல்கள் போராட்டம் காரணமாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியவில்லை. எனவே இந்த வழக்கின் அடுத்த விசாரணை அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

முன்னதாக இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ராகுல் காந்திக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. எனவே அவர் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றது குறிப்பிடத்தக்கது.