டெல்லி புறப்பட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை!

பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்றுமுன்தினம் டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானது.

இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று டெல்லி சென்றுள்ளார். காலை 7 மணிக்கு சென்னையில் விமானம் மூலம் அவர் டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லி செல்லும் அண்ணாமலை தமிழக அரசியல் களம் குறித்து தேசிய தலைமையிடம் அவர் பேச இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் மத்திய மந்திரி அமித்ஷாவை, அண்ணாமலை இன்று சந்தித்து பேச இருப்பதாகவும் தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலையிடம் அமித்ஷா பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.