மியான்மரில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மியான்மரின் சாகெய்ங் நகரின் வடமேற்கில் 16 கி.மீ தொலைவில் மதியம் 12.50 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
பூமியின் கீழே 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கம் உணரப்பட்டு 12 நிமிடங்களில் சாகெய்ங் நகரின் தெற்கே 18 கி.மீ தொலைவில் 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பல இடங்களில் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு, கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. டௌங்கோ நகரில் தொழுகை நடைபெற்றபோது மசூதி இடிந்து விழுந்ததால் 3 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மியான்மர் ராணுவ அரசின் தலைவர் இன்று வெள்ளிக்கிழமை மாலை தொலைக்காட்சி உரையில், நிலநடுக்கத்துக்கு இதுவரை 144 பேர் பலியானதாகவும், 730 பேர் காயமடைந்ததாகவும் கூறினார்.
இறப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மியான்மரில் பூகம்பமும், அதன் தாக்கத்தால் தாய்லாந்தில் கடும் நில அதிர்வும் ஏற்பட்ட நிலையில், பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மியான்மரில் இதுவரை 20 பேரும், பாங்காக்கில் 3 பேரும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மியான்மரை இன்று இரண்டு பூகம்பங்கள் தாக்கியதில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கெனவே ராணுவ ஆட்சியின் கீழ் இருந்துவரும் மியான்மரில் பல பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.50 மணிக்கு ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக நில நடுக்கங்கள் பதிவாகின. இந்த பூகம்ப பாதிப்புகள் அண்டை நாடான தாய்லாந்திலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பல இடங்களில் பாதுகாப்பு கருதி பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மியான்மரில் 20 பேர் பலி: இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியாகாத நிலையில், தற்போது உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மியான்மரில் பூகம்பத்துக்கு 20 பேர் இதுவரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் நைப்பியிதோவில் உள்ள பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாளத்தை வெளியிட விரும்பாத மருத்துவர் ஒருவர் கூறுகையில், “மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார். இதனிடையே, மியான்மர் ராணுவ ஆட்சிக் குழு சர்வதேச உதவிக்கு அழைப்பும் விடுத்துள்ளது.
மியான்மரில் பூகம்பம் காரணமாக மியான்மரில் உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மேரி மான்ரிக் கூறுகையில், “சாலைகள், பாலங்கள், அரசு கட்டிடங்கள் என பொது உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது எங்களுக்கு பெரிய அணைகள் பற்றி கவலை எழுந்துள்ளது. அவற்றின் நிலைமைகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.