துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், அவரது துறைகள் மீதான மானிய கோரிக்கைகளையும் சட்டப்பேரவையி்ல் முதல்வர் ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. நேற்றைய நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் தன் வசம் உள்ள திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை மீதான மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார். தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி வசம் உள்ள இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகளையும் தாக்கல் செய்தார்.
அப்போது, பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘துணை முதல்வர் உதயநிதி நேற்று உடல்நல குறைவுடன் சட்டப்பேரவைக்கு வந்தார். இன்று கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கட்டாயம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். எனவே, அவரது துறை சார்ந்த மானிய கோரிக்கைகளை முன்வைக்க கடமைப்பட்டுள்ளேன்’’ என்றார்.