சென்னையில் உறுதிபூண்டது, ஐதராபாத்தில் நிறைவேறி உள்ளது: மு.க.ஸ்டாலின்!

சென்னையில் உறுதிபூண்டது, ஐதராபாத்தில் நிறைவேறி உள்ளது. இந்தியாவின் எதிர்காலத்தை நியாயமற்ற முறையில் மாற்றியமைக்க எவரையும் அனுமதிக்க மாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் உறுதிபூண்டது, ஐதராபாத்தில் நிறைவேறி உள்ளது..

தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தெலுங்கானா மாநிலச் சட்டமன்றத்தில், நீதி, சமத்துவம் மற்றும் கூட்டாட்சியியல் உணர்வை உயர்த்திப் பிடிக்கும் வகையிலான நியாயமான மறுசீரமைப்பை வலியுறுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார். தமிழ்நாட்டைத் தொடர்ந்து, தெலுங்கானா நிறைவேற்றி உள்ள இந்த தீர்மானம் நமது ஜனநாயகத்தின் சமநிலையைக் குலைக்கும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்தும் நமது கூட்டு நடவடிக்கைக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இது வெறும் தொடக்கம் மட்டுமே! நியாயமான மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் இரண்டாவது கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில், மேலும் பல மாநிலங்கள் நம்மோடு இணைவார்கள். இந்தியாவின் எதிர்காலத்தை நியாயமற்ற முறையில் மாற்றியமைக்க எவரையும் அனுமதிக்க மாட்டோம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.