விஜய்யின் “எங்களுக்கும் திமுக-விற்கும் போட்டி” என்ற கருத்து குறித்து பேசிய செல்லூர் ராஜு, “நாங்க மக்களோட மக்களா இருக்கோம். அதனால விஜய் எங்களை சொல்லல என தெரிவித்து உள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கோட்டையன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்து செல்லூர் ராஜு தனது கருத்துகளை பகிர்ந்தார்.
விஜய்யின் “எங்களுக்கும் திமுக-விற்கும் போட்டி” என்ற கருத்து குறித்து பேசிய செல்லூர் ராஜு, “நாங்க மக்களோட மக்களா இருக்கோம். அதனால விஜய் எங்களை சொல்லல. திமுக எப்படி வேஷம் போடுதுன்னு அவரும் சொல்றாரு. மத்திய அரசையும் விமர்சனம் பண்ணியிருக்காரு,” என்று தெரிவித்தார். “நாங்க எந்த தவறும் பண்ணல. அதனால எங்களைப் பற்றி அவர் பேசல,” என்று விளக்கினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அமித் ஷா சந்திப்பு குறித்து கேட்டபோது, “புரட்சித் தலைவி அம்மாவும். எங்க பொதுச்செயலாளர் எடப்பாடியார்தான் இரும்பு மனிதர்கள். அவர் சந்திப்பைப் பற்றி ஊடகங்கள்ட்ட விவரமா சொல்லிட்டாரு. கூட்டணி பற்றி கேட்டா, ‘ஆறு மாதம் பொறுங்க, நாங்களே சொல்வோம்’னு சொல்லியிருக்காரு,” என்று பதிலளித்தார். “நாங்க துடிக்கல. சூட்கேஸ் கொடுக்கல. விருப்பப்பட்டு இருக்கற மாதிரி எல்லாம் இல்ல,” என்று கூறி, கூட்டணி பேச்சுவார்த்தைகளை மறுத்தார்.
ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) “எடப்பாடி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டும்” என்று கூறியது குறித்து, “ஓபிஎஸ்-ஐ சேர்க்க திட்டம் இல்லைன்னு பொதுச்செயலாளர் திட்டவட்டமா சொல்லிட்டாரு. அவர் என்ன சொல்றாருன்னு அவர்ட்ட போய் கேளுங்க. எங்க பொதுச்செயலாளர் அதுக்கெல்லாம் பதில் சொல்வாரு,” என்று ராஜு தெரிவித்தார்.
செங்கோட்டையனின் நிர்மலா சீதாராமன் சந்திப்பு குறித்து கேட்கப்பட்டபோது, “செங்கோட்டையன் எங்களோட அமைப்பு செயலாளர். நிர்மலா சீதாராமன் தமிழ்ப் பெண், மதுரையில பிறந்தவர். அவங்கள சந்திக்கறது தப்பு இல்லையே என்றார்.
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்திற்கு பிறகு, செங்கோட்டையன் தனியாக டெல்லி சென்று உள்ளாரே என்ற கேள்விக்கு, “அதெல்லாம் நீங்களா கற்பனை பண்ணாதீங்க,” என்று பதிலளித்தார்.
“2026-ல் அதிமுக தலைமையிலான கூட்டணி அமையும். எடப்பாடியார் தமிழ்நாட்டு முதலமைச்சராவார். மக்கள் எங்க பக்கம் இருக்காங்க. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் எல்லாரும் எடப்பாடியாரை விரும்புறாங்க. கொரோனா காலத்துல கூட முழு சம்பளம் கொடுத்து உதவினார்,” என்று செல்லூர் ராஜு பெருமையாகக் கூறினார். “கூட்டணி பற்றி கவலைப்படாதீங்க. எங்க பொதுச்செயலாளர் பார்த்துப்பாரு,” என்று உறுதியளித்தார்.