100 நாள் வேலை திட்டம் தமிழ்நாட்டில்தான் முறையாக செயல்படுத்தப்படுகிறது. பாஜக விசாரணை ஆணையம் அமைத்து கண்டுபிடிக்கட்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
100 நாள் வேலையில் முறைகேடு நடைபெறுகிறதா? என்பதை பா.ஜ.க. அரசு விசாரணை ஆணையம் அமைத்து கண்டுபிடிக்கட்டும். இந்தியாவிலேயே 100 நாள் வேலை திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வரும் மாநிலம் தமிழ்நாடுதான்.
தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களில் தொகுதிகள் குறையாது என்று கூறும் உள்துறை மந்திரி, வட மாநிலங்களில் தொகுதிகள் கூடாது என்று உறுதியளிக்க தயாரா?
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் நலனுக்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்ததாக கூறுகிறார். அதே சமயம், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும் என்று அமித்ஷா கூறுகிறார். இதில் யார் பொய் சொல்கிறார் என்பது விரைவில் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.