தமிழகத்​தில் 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்ந்தது!

தமிழகத்​தில் உள்ள 40 சுங்​கச்​சாவடிகளில் நேற்று நள்​ளிரவு முதல் சுங்​கக்​கட்டண உயர்வு அமலுக்கு வந்​தது.

தமிழகத்​தில் மொத்​தம் 5,381 கி.மீ. தூரத்​துக்கு நெடுஞ்​சாலைகள் உள்​ளது. இந்த நெடுஞ்​சாலைகளில் தேசிய நெடுஞ்​சாலைகள் ஆணை​யத்​தின் கீழ் 78 சுங்​கச்​சாவடிகள் நிறு​வப்​பட்​டு, சுங்​கக்​கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில் தேசிய நெடுஞ்​சாலைகளில் உள்ள சுங்​கச்​சாவடிகளில் ஆண்​டுக்கு ஒரு முறை, 2 கட்​டங்​களாக ஏப்​ரல் மற்​றும் செப்​டம்​பர் மாதங்​களில் சுங்​கக் கட்​ட​ணம் உயர்த்​தப்​படு​வது வழக்​கம். இதன்​படி சுங்​கக் கட்​ட​ணம் 5 சதவீதத்​தில் இருந்து 10 வரை உயர்த்தி வசூலிக்​கப்​படும்.

அந்த வகை​யில் நடப்​பாண்​டில் தமிழகத்​தில் உள்ள 78 சுங்​கச்​சாவடிகளில் முதல்​கட்​ட​மாக 40 சுங்​கச்​சாவடிகளின் கட்​ட​ணத்தை ஏப். 1-ம் தேதி முதல் உயர்த்தி வசூலிக்க தேசிய நெடுஞ்​சாலைகள் ஆணை​யம், சுங்​கச்​சாவடிகளுக்கு சுற்​றறிக்கை அனுப்​பி​யிருந்​தது. அதன்​படி சென்​னையை அடுத்​துள்ள வானகரம், சூரப்​பட்டு சுங்​கச்​சாவடிகள், சென்னை – கொல்​கத்தா நெடுஞ்​சாலை​யில் உள்ள நெல்​லூர் சுங்​கச்​சாவடி, தாம்​பரம் – திண்​டிவனம் நெடுஞ்​சாலை​யில் உள்ள ஆத்​தூர் சுங்​கச்​சாவடி, செங்​கல்​பட்​டில் உள்ள பரனூர் ஆகிய சுங்​கச்​சாவடிகளில் கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

அதே​போல் சென்னை – பெங்​களூரு நெடுஞ்​சாலை​யில் உள்ள பெரும்​புதூர், பட்​டரைப்​பெரும்​புதூர், அரியலூர் மாவட்​டம் மணகெ​தி, திருச்சி மாவட்​டம் கல்​லக்​குடி, வேலூர் மாவட்​டம் வல்​லம், திரு​வண்​ணா​மலை மாவட்​டம் இனம்​கரி​யாந்​தல், விழுப்​புரம் மாவட்​டம் தென்​ன​மாதே​வி, நாங்​குநேரி, பள்​ளிக்​கொண்​டா, புதுகோட்டை மாவட்​டம் வாகைகுளம், எஸ்வி புரம், சாலைபுதூர், வாணி​யம்​பாடி, திருப்​பாச்​சேத்தி உள்​ளிட்ட 40 சுங்​கச்​சாவடிகளில் சுங்​கக் கட்டண உயர்வு நேற்று நள்​ளிரவு முதல் அமலுக்கு வந்​தது.

கார், ஜீப், வேன், ஆட்​டோ, லாரி, பேருந்​துகள் என ஒவ்​வொரு வகை வாக​னங்​களுக்கு ஏற்ப 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை சுங்​கக்​கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. அந்த வகை​யில் கார் உள்​ளிட்ட 4 சக்கர இலகு ரக வாக​னங்​களுக்கு ரூ.5 கூடு​தலாக வசூலிக்​கப்​படும். பேருந்​து, லாரி உள்​ளிட்ட கனரக வாக​னங்​களுக்கு அச்​சுகள் எண்​ணிக்கை அடிப்​படை​யில் ரூ.15 முதல் ரூ.30 வரை கூடு​தல் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படும். இந்த கட்​ட​ணங்​கள் தொடர்​பான அட்​ட​வணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. தேசிய நெடுஞ்​சாலை ஆணை​ய இணை​யதளத்​தில் கட்டண விவரங்​களை தெரிந்து கொள்​ளலாம்.

சென்​னையை அடுத்த பரனூர் சுங்​கச்​சாவடி​யில் ரூ.5 முதல் ரூ.25 வரை கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இந்த சுங்​கச்​சாவடி​யில் கார், ஜீப், வேன், இலகுரக வாக​னங்​கள் ஒரு முறை செல்​வதற்கு ரூ.75, இலகுரக வர்த்தக வாக​னங்​கள் செல்​வதற்கு ரூ.120, பேருந்​துகளுக்கு ரூ.255, வர்த்தக வாக​னங்​கள் செல்​வதற்கு ரூ.275, கனரக கட்​டு​மான எந்​திர வாக​னங்​கள் செல்​வதற்கு ரூ.400, பெரிய வாக​னங்​கள் செல்​வதற்கு ரூ.485 கட்​ட​ண​மாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. ஒரே நாளில் சென்று திரும்​புவதற்​கும் கட்​ட​ணங்​கள் உயர்த்​தப்​பட்​டுள்​ளன.

வானகரம் சுங்​கச்​சாவடி​யில் ரூ.5 முதல் ரூ.15 வரை சுங்​கக்​கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டிருக்​கிறது. இங்கு கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாக​னங்​கள் ஒரு முறை செல்​வதற்கு ரூ.55, இலகுரக வர்த்தக வாக​னங்​கள் செல்​வதற்கு ரூ.90, பேருந்​துகளுக்கு ரூ.185, வர்த்தக வாக​னங்​கள் செல்​வதற்கு ரூ.200, கனரக கட்​டு​மான எந்​திர வாக​னங்​கள் செல்​வதற்கு ரூ.290, பெரிய வாக​னங்​கள் செல்​வதற்கு ரூ.350 வசூலிக்​கப்​படும். சூரப்​பட்டு சுங்​கச்​சாவடி​யில் கார் போன்ற இலகுர வாக​னங்​கள் ஒரு முறை செல்​வதற்கு ரூ.75, இலகுரக வர்த்தக வாக​னங்​கள் செல்​வதற்கு ரூ.120, பேருந்​துகளுக்கு ரூ.255, வர்த்தக வாக​னங்​கள் செல்​வதற்கு ரூ.280, கனரக கட்​டு​மான எந்​திர வாக​னங்​கள் செல்​வதற்கு ரூ.400, பெரிய வாக​னங்​கள் செல்​வதற்கு ரூ.490 வசூலிக்​கப்​பட​வுள்​ளது.