பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் குறித்தும் பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது என்று வீரலட்சுமி கூறியுள்ளார்.
தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் விஜய் தலைமையில் கடந்த ஒரு வாரம் முன்பு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் தடுப்பு குறித்தும் பேசியிருந்தார். பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் குறித்தும் பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது.
சினிமா துறை சேர்ந்த பாடகி சுசித்ரா உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்தார். விஜய் தனது இல்ல நிகழ்ச்சிகளில் சக நடிகர், நடிகைகளுக்கு வெள்ளி தாம்பூலத் தட்டில் விலை உயர்ந்த போதைப் பொருள் வைத்து வழங்குவார் என கூறினார்.
சுசித்ராவின் குற்றச்சாட்டிற்கு விஜய் அமைதியாக இருக்கிறார். காவல் துறையும் விஜய் மீதும், நடிகை த்ரிஷா மீதும் விசாரணை நடத்தாதது ஏன்?
இப்படி ஒரு சூழலில் விஜய் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்து போதைப் பொருள் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.