டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு!

டாஸ்​மாக் அலு​வல​கத்​தில் அமலாக்​கத் துறை நடத்​திய சோதனை தொடர்​பான வழக்கை வேறு மாநிலத்​துக்கு மாற்​றக்​கோரி தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் முறை​யீடு செய்​துள்​ளது.

சென்​னை​யில் உள்ள டாஸ்​மாக் தலைமை அலு​வல​கத்​தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்​கத் துறை அதி​காரி​கள் தொடர் சோதனை​யில் ஈடு​பட்​டனர். இந்த சோதனையை சட்​ட​விரோதம் என அறிவிக்​கக் கோரி​யும் டாஸ்​மாக் அதி​காரி​களை விசா​ரணை என்ற பெயரில் துன்​புறுத்​தக்​கூ​டாது என உத்​தர​விடக்​கோரி​யும் தமிழக அரசு மற்​றும் டாஸ்​மாக் நிறு​வனம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

இந்த வழக்​கு​களை ஏற்​கெனவே விசா​ரித்த நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், என். செந்​தில்​கு​மார் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இந்த சோதனை​யின் அடிப்​படை​யில் அமலாக்​கத் துறை மேல்​நட​வடிக்கை எடுக்​கக் கூடாது என இடைக்​காலத் தடை விதித்​தனர். அதன்​பிறகு இந்த வழக்கு விசா​ரணை​யில் இருந்து இரு நீதிப​தி​களும் வில​கினர்.

அதையடுத்து, இந்த வழக்கு விசா​ரணை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், கே.​ராஜசேகர் ஆகியோர் அடங்​கிய அமர்​வுக்கு மாற்​றப்​பட்​டது. கடந்​த​முறை இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள், இந்த வழக்​கில் அமலாக்​கத் துறை​யின் பதில் மனுவுக்கு தமிழக அரசு தரப்​பில் பதிலளிக்க உத்​தர​வி்ட்டு விசா​ரணையை வரும் ஏப்​.8-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தனர். ஏப்.8 மற்​றும் ஏப்.9 ஆகிய இரு தேதி​களில் இந்த வழக்​கில் இறு​தி​விசா​ரணை நடத்​தப்​படும் எனவும் நீதிப​தி​கள் அறி​வித்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், இந்த அமர்​வில் உள்ள நீதிபதி கே.​ராஜசேகர், தமிழக அமைச்​சர் செந்​தில் பாலாஜிக்​காக ஏற்​கெனவே ஆஜராகிய வழக்​கறிஞர் ஒரு​வரின் சகோ​தரர் என்​ப​தால் இந்த அமர்​வும் இந்த வழக்கை விசா​ரிக்​கக் கூடாது எனக்​கூறி மூத்த வழக்​கறிஞர் கே.எம்​.​விஜயன் உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வில் முறை​யிட்​டார். அப்​போது இதுதொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட அமர்​விலேயே முறை​யிட தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் அறி​வுறுத்​தி​னார்.

இந்​நிலை​யில், இந்த வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் இருந்து வேறு மாநிலத்​துக்கு மாற்​றக்​கோரி தமிழக அரசு சார்​பில் மூத்த வழக்​கறிஞர் விக்​ரம் சவுத்​ரி, உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சஞ்​சீவ் கண்ணா தலை​மையி​லான அமர்​வில் நேற்று முறை​யீடு செய்​தார். அந்த முறை​யீட்டை ஏற்ற தலைமை நீதிப​தி, இதுதொடர்​பாக மனு தாக்​கல் செய்​தால் வரும் ஏப்​.7 அன்​று வி​சா​ரிக்​கப்​படும்​ என தெரி​வித்​துள்​ளார்​.