சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இது குறித்த அறிவிப்பை கட்சி மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார்.

மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், தேசிய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில், வக்பு வாரிய சட்​டத் திருத்​தம் மூலம் நாட்​டில் பிளவு​வாத அரசி​யலை கட்​டமைக்​கின்​றனர் என்று கேரள மாநில முதல்​வர் பின​ராயி விஜயன் குற்றம்சாட்டினார்.

மதுரை​யில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் அகில இந்​திய மாநாட்​டுப் பொதுக் கூட்​டம், மாநிலச் செய​லா​ளர் சண்​முகம் தலை​மை​யில் நடை​பெற்​றது. வரவேற்​புக் குழுச் செய​லா​ளர் சு.வெங்​கடேசன் எம்​.பி. வரவேற்​றார். மூத்த தலைவர்கள் பிர​காஷ் காரத், பிருந்தா காரத், கே. பால​கிருஷ்ணன், வாசுகி ஆகியோர் பேசினர். இந்​தக் கூட்​டத்​தில் கேரள முதல்​வர் பின​ராயி விஜயன் பேசி​ய​தாவது:

திமுக அரசு கேரளாவோடு நெருக்​க​மான அரசாக உள்​ளது. மத்​திய பாஜக அரசு மாநிலங்​களின் அதி​காரங்​களைப் பறிக்​காமல் கூட்​டாட்​சியை நடத்த வேண்​டும் என்று தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறோம். இந்த மாநாட்​டில் மதச் சார்​பின்​மை​யை, ஜனநாயகத்​தைப் பாது​காக்​கும்​ நோக்​கில் திட்​டம் வகுக்​கப்​பட்​டுள்​ளது. மாற்று அரசி​ய​லாக விஞ்​ஞான சோஷலிசம் வளர்ந்து வரு​கிறது. மத்​திய பாஜக அரசு மக்​களைப் பிளவுபடுத்​தும் அரசாக உள்​ளது. வகுப்​பு​வாதத்​துக்கு எதி​ரான சக்​தி​கள் ஒன்​றிணைந்​து, மக்​களைப் பாது​காக்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கிறோம்.

வக்பு வாரிய சட்​டத் திருத்​தம் மூலம் நாட்​டில் பிளவு​வாத அரசி​யலைக் கட்​டமைக்​கின்​றனர். கேரளா​வில் இரு சமூகத்​தினரிடையே பிரி​வினையை உண்​டாக்கி வெறுப்பு அரசி​யலை ஏற்​படுத்​துகின்​றனர். கேரளா​வில் இடது முன்​னணி அரசை​யும், தமிழகத்​தில் திமுக அரசை​யும் பழி​வாங்​கு​கிறார்​கள். ‘ஒரே நாடு ஒரே தேர்​தல்’ என திசை திருப்​பும் முழக்​கத்தை எழுப்​பி​யுள்​ளனர். மத்​திய பாஜக அரசுக்கு எதி​ராக மக்​களை ஒன்​று​படுத்த வேண்​டும்.

மத்​திய அரசு கார்ப்​பரேட் நிறு​வனங்​களுக்கு ரூ.15 லட்​சம் கோடி கடனை தள்​ளு​படி செய்​துள்​ளது. இதனால் சாதாரண மக்​கள் வாழ​முடி​யாத சூழல் உள்​ளது. கேரளா​வும், தமிழக​மும் ஒரு​மித்த தன்மை கொண்​ட​வை​யாக உள்​ளன. இரு மாநில மக்​களும் ஒரே தன்​மை​யில் நெருக்​க​மாக இருக்​கிறார்​கள். இவ்​வாறு அவர் பேசி​னார்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொருளாளர் மதுக்​கூர் ராமலிங்​கம் நன்றி கூறி​னார். முன்​ன​தாக மதுரை பாண்டி கோயில் அரு​கில் இருந்து ஆயிரக்​கணக்​கானோர் பங்​கேற்ற செந்​தொண்​டர் அணிவகுப்பு நடை​பெற்​றது.

இந்த மாநாட்டில் கட்​சி​யின் அகில இந்​தி​யப் பொதுச் செய​லா​ள​ராக கேரள மாநிலத்​தைச் சேர்ந்த எம்​.ஏ. பேபி (71) தேர்ந்தெடுக்​கப்​பட்​டார். கேரள மாநிலம் கொல்​லத்​தில் உள்ள பிரக்​குளத்​தைச் சேர்ந்த பேபி, மாணவப் பரு​வத்​திலேயே இந்​திய மாணவர் சங்​கம், இந்​திய ஜனநாயக வாலிபர் சங்​கத்​தில் பணி​யாற்​றிய​வர்.

1986 முதல் 1998 வரை மாநிலங்​களவை உறுப்​பின​ராக இருந்​துள்​ளார். 2006 முதல் 2011 வரை கேரள அமைச்​சர​வை​யில் கல்வி, கலாச்​சா​ரத் துறை அமைச்​ச​ராக பொறுப்பு வகித்​துள்​ளார்​. இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும், கேரள முதல்​வர் பின​ராயி விஜயன், தமிழகத்​தைச் சேர்ந்த கே.​பால​கிருஷ்ணன், உ. வாசுகி உட்பட 18 பேர் அரசி​யல் தலை​மைக் குழு உறுப்​பினர்​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர். தமிழகத்​தைச் சேர்ந்த பால​பார​தி, குணசேகரன் உட்பட 85 பேர் மத்​தி​யக் குழு உறுப்​பினர்​களாகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர்.