பெண் காவலர்கள் குறித்து அவதூறு: சவுக்கு சங்கர் மீது புதிதாக 15 வழக்குகள் பதிவு!

கோவை மாநகர சைபர் க்ரைம் பிரி​வில் உதவி ஆய்​வாள​ராகப் பணி​யாற்றி வந்த சுகன்யா கடந்த​ஆண்டு மே மாதம் அளித்த புகாரில், ‘பெண் காவலர்​கள், உயர​தி​காரி​கள் குறித்து அவதூறாகப் பேசிய சவுக்கு சங்​கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று கூறி​யிருந்​தார். அதன் பேரில், போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து சங்கரை கைது செய்தனர். தொடர்ந்​து, பல்​வேறு காவல் நிலை​யங்​களில் சங்​கர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில், தன் மீது பதிவு செய்​யப்​பட்ட வழக்கு விசா​ரணை​களை ஒரே இடத்​துக்கு மாற்ற வேண்​டும் என சவுக்கு சங்​கர் தரப்​பில் நீதி​மன்​றத்​தில் கோரிக்கை விடுக்​கப்​பட்​டது. அதனடிப்​படை​யில், சவுக்கு சங்​கர் மீதான அவதூறு வழக்​கு​களை கோவைக்கு மாற்றி நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதுகுறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் போலீ​ஸார் கூறும்​போது, “திருச்சி மாநகர், திருச்சி மாவட்​டம், மதுரை, திண்​டுக்​கல், விழுப்​புரம், ராணிப்​பேட்​டை, பெரம்​பலூர், சிவகங்கை, தரு​மபுரி, சேலம், சென்​னை, நாகை, நீலகிரி, கன்​னி​யாகுமரி, நெல்லை ஆகிய 15 இடங்​களில் உள்ள காவல் நிலை​யங்​களில் உள்ள வழக்​கு​கள் இங்கு மாற்​றப்​பட்​டு, 15 புதிய வழக்​கு​கள் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்​யப்​பட்டு உள்​ளன’’ என்​றனர்.