அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என எஸ்.டி.பி.ஐ. கட்சி விமர்சித்துள்ளது.
அ.தி.மு.க.வின் கூட்டணி முடிவு, மத்திய பா.ஜ.க. அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என எஸ்.டி.பி.ஐ. கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு அ.தி.மு.க. எத்தனை காரணங்களை கூறினாலும் அதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மாநில உரிமைகளையும், மக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உள்ளது. ஆனால், அ.தி.மு.க.வின் இந்த கூட்டணி முடிவு, அந்த கடமையை மறந்து மத்திய பா.ஜ.க. அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படும் பா.ஜ.க.வுடன் கைகோர்ப்பது, எந்தவொரு மாநில கட்சிக்கும் அழிவைத் தவிர வேறு எதையும் கொண்டுவராது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.