நயி​னார் நாகேந்​திரன் வேண்டுகோளை ஏற்று ​மீண்டும் காலணி அணிந்த அண்ணாமலை!

மாநிலத் தலைவரின் கட்டளையை ஏற்று, அவர் வாங்கிக் கொடுத்த காலணியை மேடையில் அணிந்துகொண்டேன் என்று அண்ணாமலை கூறினார்.

கடந்த 2024 டிசம்​பரில், அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் வன்​கொடுமை தொடர்​பான முதல் தகவல் அறிக்கை (எஃப்​ஐஆர்), பொது வெளி​யில் வெளி​யானது. அப்​போது, கோவை​யில் டிசம்​பர் 26-ம் தேதி செய்​தி​யாளர்​களை சந்​தித்​த​ அண்​ணா​மலை ‘‘தி​முக ஆட்​சியை அகற்​றும் வரை காலணி அணிய மாட்​டேன்’’ என்று சபதம் எடுத்​துக்​கொண்​டார்.

இந்​நிலை​யில், தமிழக பாஜக தலை​வ​ராக நேற்று பொறுப்​பேற்ற நயி​னார் நாகேந்​திரன் விழாமேடை​யில், ‘‘திமுக ஆட்​சியை அகற்​றும் வரை காலணி அணிய மாட்​டேன் என்று அண்​ணா​மலை சபதம் ஏற்​றார். ஆட்சி மாற்றத்​துக்​காக அமித் ஷா நேற்றே அடிக்​கல் நாட்​டி​விட்​டார். அதனால், அண்ணா​மலை மீண்​டும் காலணி அணிந்​து​கொள்ள வேண்​டும்’’ என்று வேண்​டு​கோள் விடுத்​து, புதி​தாக வாங்கி வந்த காலணியை அண்​ணா​மலை​யிடம் கொடுத்​தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, “2026-ம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இன்று முதல் நான் பா.ஜ.க.வின் சாதாரண தொண்டன். மாநிலத் தலைவர் சொல்வதை கேட்பது எங்கள் கடமை. மாநிலத் தலைவரின் கட்டளையை ஏற்று, அவர் வாங்கிக் கொடுத்த காலணியை மேடையில் அணிந்துகொண்டேன். நிச்சயமாக தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.