தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:-
மகிழ்ச்சியான புத்தாண்டு தினத்தையொட்டி அன்பான வாழ்த்துகள்! இந்தப் புத்தாண்டு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசிர்வதிக்கப்படட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.