“கூட்டாட்சியியலின் சமநிலையை உறுதிசெய்வது ஒரு கோரிக்கை மட்டுமல்ல, அது அரசியலமைப்புச் சட்டம் விதிக்கும் கடமை. தமிழ்நாட்டின் போராட்டம் தனக்கானது மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் உரிய அதிகாரங்களுக்கானது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
கூட்டாட்சியியலின் சமநிலையை உறுதிசெய்வது ஒரு கோரிக்கை மட்டுமல்ல, அது அரசியலமைப்புச் சட்டம் விதிக்கும் கடமை. தமிழ்நாட்டின் போராட்டம் தனக்கானது மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் உரிய அதிகாரங்களுக்கானது.
மாநில சுயாட்சியை மீட்டெடுப்பது ஏன் இப்போதைய முக்கியத் தேவையாக உள்ளது என்பதை விளக்கி நான் எழுதியுள்ள கட்டுரை ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. வாசிக்க…” என்று முதல்வர் கூறியுள்ளார்.