துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் கூட்டுவது அரசியலமைப்பை மதிக்காத செயலாகும் என்று
கவர்னருக்கு, செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் கவர்னர் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருந்தது சட்டவிரோதம் என்று கூறியும், சட்டவிரோத செயலை செய்த கவர்னர் பதவி விலகி இருக்கவேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்காமல் துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் ரவி அவர்கள் கூட்டுவது . அரசியலமைப்பை மதிக்காத செயலாகும். கவர்னரின் அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.