ஜம்மு காஷ்மீரின் நடத்தப்பட்ட கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
ஜம்மு காஷ்மீர் பகல்காமில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரர்கள் உள்ளிட்ட அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயிருக்கின்றன. இந்த கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.