அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மின்னஞ்சல் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மோப்பநாய் மூலம் காவல் துறையினர் சோதனை நடத்தினர். சமீர் என்ற பெயரில் மதியம் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், ஆர்டிஎக்ஸ் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சோதனை செய்ததில் அது போலி என்று தெரியவந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டிலும் எடப்பாடி பழனிசாமி அப்போது முதல்வராக இருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன்பின்னர், தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.