மே 3ல் நடைபெறுகிறது திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் மே 3ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கிறது. இருப்பினும், இப்போதே தேர்தல் குறித்த நடவடிக்கைகளை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டன. கூட்டணி, பிரச்சார வியூகம் என ஒவ்வொரு கட்சியும் அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலை மனதில் வைத்தே காய்களை நகர்த்தி வருகிறது. இதற்கிடையே திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் மே 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மே 3ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் மே 3ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.