இந்தியாவின் அட்டாக் போர் நடவடிக்கை ஆகும். இதை போர் நடவடிக்கையாக கருதுகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிக்கையில் இந்தியாவை கடுமையாக தாக்கி உள்ளார். பாகிஸ்தானில் 5 இடங்களில் கோழைத்தனமான தாக்குதல்களை எதிரிகள் நடத்தி உள்ளனர். போர் நடவடிக்கைக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமையும் உள்ளது. பலமான பதிலடி கொடுக்கப்படும். முழு தேசமும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளுடன் நிற்கிறது. பாகிஸ்தான் ஆயுதப்படைக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். மேலும் முழு பாகிஸ்தான் நாட்டின் மன உறுதியும் உங்களுடன் உள்ளது. இந்தியாவை எப்படி சமாளிப்பது எப்படி பதிலடி தருவது என்று தெரியும். பாகிஸ்தான் தேசமும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளும் எதிரியை எவ்வாறு கையாள்வது என்பது தெரியும். எதிரி அவர்களின் தீய இலக்குகளில் வெற்றிபெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அவர்களின் நோக்கங்கள் வெல்ல அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரின் அறிவிப்பால் இரண்டு நாடுகளுக்கு இடையே அதிகாரபூர்வ போர் தொடங்கிவிட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. பாதுகாப்பு துறையால் ஆபரேஷன் சிந்தூர் என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடித்தியது இந்திய ராணுவம். அங்கு தீவிரவாத முகாம்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில் இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன. இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வில்லை.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஐந்து இடங்களில் இந்தியாவின் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்த முறை இந்தியாவில் இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடித்தியது இந்திய ராணுவம். அந்த இடங்கள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. கோட்லி, அகமதுபூர் கிழக்கு, முசாபராபாத், பாக் மற்றும் முரிட்கே ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளன. இவற்றில், அகமதுபூர் கிழக்கு மற்றும் முரிட்கே ஆகியவை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இடங்கள் ஆகும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கினால் வேலைக்கு ஆகாது. பாகிஸ்தான் பஞ்சாப்பில் தாக்க வேண்டும். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் சிந்துவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கினால் வேலைக்கு ஆகாது. பாகிஸ்தான் பஞ்சாப்பில் அடிக்காத வரை, ராவல்பிண்டியில் அடிக்காத வரை எதுவும் ஆகாது. அதற்கெல்லாம் நம்மிடம் பவர் இருக்கிறது. இதையடுத்தே இந்தியா துல்லியமாக பாகிஸ்தான் உள்ளே.. முக்கியமாக பாகிஸ்தான் பஞ்சாப்பில் இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளது. அங்கே உள்ள பயங்கரவாத தீவிரவாத மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த தாக்குதல் மூலம் 12 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.