தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த மாதம் முதல் ஜனவரி 4-ம் வாரம் வரை 1256 உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார். அதன்பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரத்தில் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் இயங்கும்.இந்த மாதம் முதல் ஜனவரி 2026 வரை திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த முகாம்களில் ஈ.சி.ஜி. இதய சுருள் அறிக்கை, எக்கோகார்டியோகிராம், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறிதல் சோதனைகள், ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனைகள், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.