பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், பலோசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை எனவும் பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலோச் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பலூசிஸ்தான் மக்கள் தங்கள் “தேசிய தீர்ப்பை” வழங்கியுள்ளனர் என்றும், உலகம் இனி அமைதியாக இருக்கக்கூடாது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்ட பலூசிஸ்தான் மக்கள், சாலைகளில் திரண்டுள்ளனர். இது அவர்கள் வழங்கிய தேசிய தீர்ப்பு. இனி பலூசிஸ்தான், பாகிஸ்தான் கிடையாது. எனவே, உலகம், இனியும் வெறும் பார்வையாளராக அமைதியாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களும் இனி பலூசிஸ்தானை பாகிஸ்தான் என அழைக்க வேண்டாம் என்றும், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை மீட்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்றும் பலூசிஸ்தானிலிருந்து வெளியேறுமாறு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று உலக நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.