ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை முனைவர் ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலை கல்லூரி ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை முனைவர் என்.ஜென்சி, அந்த கல்லூரியின் ஆங்கில உதவி பேராசிரியராக நியனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை முனைவர் ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வாழ்த்துகள் முனைவர் ஜென்சி! உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்! தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்! என்று பதிவிட்டுள்ளார்.
